1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ntk seeman comment against giving car to mlas

கடன் வாங்கி எம்.எல்.ஏக்களுக்கு எதுக்கு கார்?.. சீமான் எதிர்ப்பு!...

seeman
சில தவெக எம்.எல்.ஏக்கள் சட்டபையில் பேசிய போது தொகுதி பணிகளை மேற்கொள்ள தங்களிடம் கார் இல்லை எனவும், உதவியாளரை வைத்துக்கொள்ள முடியவில்லை எனவும் சொல்ல, தமிழக முதல்வர் ஜோசப் சமீபத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

காருக்கான பராமரிப்பு செலவு ரூ.75 ஆயிரம், உதவியாளரை வைத்துக்கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் கொடுக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கார் இல்லாதவர்களுக்கு மட்டும் கார் கொடுக்கலாம்.. பல கோடி சொத்து வைத்திருப்பவர்களுக்கு எதற்கு கார்? என மக்களே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க கடன் வாங்கி கார் வழங்குவதா?.. கார் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு வழங்கினால் கூட அதில் ஒரு நியாயம் உண்டு. அரசை விமர்சிக்காமல் இருக்க எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் மறைமுக கையூட்டா?’ எனவும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உச்சநீதிமன்றம் சொன்னா கேட்கணும்!.. முதல்வர்கள் மாநாட்டில் விஜய் பேசியது என்ன?..