1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tiruppur leopard attack another 6th person

திருப்பூரில் மக்களை தாக்கும் சிறுத்தை! – பிடிபடாததால் பீதியில் மக்கள்!

Tamilnadu
திருப்பூர் பகுதியில் சுற்றிவரும் சிறுத்தை தொடர்ந்து மக்களை தாக்கி வருவதால் அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் சிறுத்தை நடமாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்ந்த 8 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், சிக்காமல் சுற்றும் சிறுத்தை பலரை தாக்கி வருகிறது. நேற்றும் ஒரு நபர் சிறுத்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை 6 பேர் சிறுத்தையால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களிடையே பீதி எழுந்துள்ள நிலையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
நிலவின் மீது மோதி வெடிக்க உள்ள ஈலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்