1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (23:39 IST)

விராட் கோலியும், கங்குலியும் மனம் விட்டுப் பேச வேண்டும்- கபில் தேவ்

விராட் கோலியும், கங்குலியும் மனம் விட்டுப் பேச வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு டி-20 கேப்டன், ஐபிஎல் –ல் பெங்களூர் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார்.  அதேபோல், இந்தாண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இ ந் நிலையில், டி-20 கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய பின் பிசிசிய தலைவர் கங்குலி பேட்டியளித்தார். அதில், கோலியை கேப்டன் பொறுப்பில் நீடிக்கும்படி கூறினோம் என்றார்.  ஆனா, அப்பொறுப்பில் இருந்து விலகிய பின் எந்ததகவலும் தனக்கு வரவில்லை என கோலி கூறினார்.

இதுகுறித்து ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முன்னாள் வீரர் கபில்தேவ், விராட் கோலியும், கங்குலியு மனம் விட்டுப் பேச வேண்டும் என முன்னாள் வீர கபில் தேவ் தெரிவித்துள்ளார்.