1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tiruchendhur kanyakumar sea sudden inflow

திடீரென உள்வாங்கிய கடல்.. திருச்செந்தூர், கன்னியாகுமரியில் பரபரப்பு..!

திருச்செந்தூர்
திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி கடல் திடீரென உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் பரபரப்பு அடைந்துள்ளனர்
 
தமிழகத்தில் உள்ள கடற்கரையில் அவ்வப்போது கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக திருச்செந்தூரில் அடிக்கடி கடல் வாங்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று திடீரென திருச்செந்தூர் கடல் சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது இதனால் பாறைகள் வெளியே தெரிந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்
 
அதேபோல் கன்னியாகுமரியிலும் இன்று காலை கடல் உள்வாங்கி காணப்பட்டதாகவும் இதனால் விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் ஒரு சில மணி நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், அமாவாசை பௌர்ணமி ஆகிய நேரங்களில் கடல் உள்வாங்குவதும் அதன்பின் சில மணி நேரத்தில் இயல்புநிலை திரும்புவதும் வழக்கம் என்றும் மக்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ராகுல் காந்தி தகுதி நீக்கம்; தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்! – காங்கிரஸ் அறிவிப்பு!