தொடர்புடைய செய்திகள்
- அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மைத்ரேயன் பாஜகவில் இணைந்தாரா?
- கரூர் மாவட்டத்தில் அதிமுக அடிப்படை உறுப்பினர் சேர்க்கை
- பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ்-ஈபிஎஸ்-க்கு அனுமதியா?
- அதிமுக அரசியல் மாயையில் சிக்கி இருக்கிறது -பண்ருட்டி ராமச்சந்திரன்
- ஆளுனருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது: அதிமுக துணை பொதுச்செயலாளர் கே,பி.முனுசாமி
திருச்சி மாநாட்டில் சசிகலாவுக்கு அழைப்பா? ஓ.பி.எஸ். கூறிய சூசக பதில்
ஏப்ரல் 24ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பின் அதிமுக மிகப்பெரிய மாநாட்டை திருச்சியில் நடத்தவுள்ளதை அடுத்து இந்த மாநாட்டில் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதில் கூறினார்.
அதிமுகவின் ஓபிஎஸ் அணி ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த உள்ளது. இந்த விழா முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும் என்றும் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் அதிமுக ஆரம்பித்த 50 ஆண்டுகள் நிறைவு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுகவின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் யார் யாருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பதை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறினார்.
இதனை அடுத்து சசிகலாவுக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்பதை அவர் சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
