1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 21 மார்ச் 2023 (17:06 IST)

''வணங்கான்'' பட நடிகை மீது தாக்குதல்...படக்குழுவினர் அதிர்ச்சி

Shooting
வணங்கான் படப்பிடிப்பில் ஏற்பட்ட பஞ்சாயத்தில் துணை நடிகை லிண்டா தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா – பாலா கூட்டணியில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட படம் வணங்கான். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இப்படத்திலிருந்து விலகினார்.

இதையடுத்து,  சூர்யாவுக்குப் பதிலாக நடிகர் அருண்விஜய் இப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வணங்கான் படத்தில் நடிக்க கேரளாவைச் சேர்ந்த துணை நடிகை லிண்டாவை ஜிதின் என்பவர் ஷூட்டிங்கிற்கு அழைத்து வந்து 3 நாட்கள் நடித்ததற்கு 22,600 சம்பளம் பேசிய நிலையில், அதை மறுத்தததாக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜிதின் நடிகையைத் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து, நடிகை லிண்டா, கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.