வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified வெள்ளி, 17 மார்ச் 2023 (10:35 IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Kanyakumari
கன்னியாகுமரியில் நாளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வர இருக்கும் நிலையில் நாளை ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
கன்னியாகுமாரி மாவட்டத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை வர உள்ளார். அவர் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சம்பவம் ஆகிய பகுதிகளை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு நாளை அனுமதி இல்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி வரும் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை ஜனாதிபதி திரௌபதி முர்மு வந்து சென்ற பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran