ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 மார்ச் 2023 (21:56 IST)

ஆபாச வீடியோ விவகாரம்: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

father benetict
கன்னியாகுமரியில் சர்ச்சுக்கு வந்த இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு வீடியோ எடுத்த பாதிரியாரை போலீஸார் கைது செய்த  நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ( 27 ) பெண்  ஒருவருடன்  உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அவர் 80க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்புகொண்டு அவர்களுடன் வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் மற்றும் வீடியோ காலிங் பேசியதாகவும் தகவல் வெளியானது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு விசாரித்த காவல்துறை, அவரது லேப்டாப்பை கைப்பற்றி அதிலிருந்து பல நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை தொடங்கியதும், பாதிரியார் பெனடிக்ட் தலைமறைவானார்.  போலீஸார் தொடர்ந்து தேடி வந்த  நிலையில், நாகர்கோவிலில் பதுங்கியிருந்த ஆன்றோவை இன்று கைது செய்து, நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பாதிரியார் பெனடிக் ஆன்றோவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசார்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.