காத்திருக்கும் கனமழை! – ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் மாவட்ட விவரங்கள்!
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் 10 மற்றும் 11ம் தேதியன்று அதிக மழை பெய்ய உள்ள மாவட்டங்களின் விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் 10 அன்று புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 11ம் தேதியன்று விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், பாண்டிசேரி, கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.