தொடர்புடைய செய்திகள்
- மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் திமுக என்ன சாதித்தது? காயத்ரி ரகுராம் கேள்வி!
- உள்ளாட்சித் தேர்தல் - ஆலோசனை கூட்டத்தை கூட்டும் அதிமுக!
- அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு ரூ.1 லட்சம் கோடி: பிடிஆர்
- ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைப்பா? ஈபிஎஸ் விளக்கம்!
- ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை விடுறாங்க! – ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு!
திமுகவை நாங்கள் நம்புகிறோம்: விசிக தலைவர் திருமாவளவன்
வருவாய் பற்றாக்குறையை காரணம் காட்டி வரிச்சுமையை திமுக சுமத்தாது என்று நம்புகிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
இன்று தமிழக நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் நீண்ட நாட்களாக பேருந்து கட்டணம் உயர்த்த வில்லை என்றும் மின் கட்டணம் உயர்த்த வில்லை என்றும் சொத்துவரி 15 வருடங்களாக உயர்த்தவில்லை என்றும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இதனால் பேருந்து மின் கட்டணம் மற்றும் சொத்து வரி கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மீது வரிச்சுமையை சுமத்தாமல் பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய பிரிவினர் வரி செலுத்தும் வகையில் திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்
திருமாவளவனின் நம்பிக்கையை திமுக காப்பாற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
