வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (11:23 IST)

ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைப்பா? ஈபிஎஸ் விளக்கம்!

ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். 

 
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில் இவர் மீது ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் பாஜகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய போவதாக கூறுவது தவறான தகவல். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பேசினேன். அவர் அதிமுகவில் தான் தொடர்ந்து இருப்பார் என பேட்டி அளித்துள்ளார்.