1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (10:20 IST)

ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை விடுறாங்க! – ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு!

இன்று அதிமுக ஆட்சியில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று அதிமுகவின் 10 ஆண்டுகால செலவினங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் “அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா மினி க்ளினிக் திட்டத்தை திமுக மூடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிமுக நிதிநிலை அறிக்கை வெளியிட்டபோதும், ஆட்சி நடத்த முடியாததால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கின்றனர்” என கூறியுள்ளார்.