1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. One lakh crore non planning expenses says PTR

அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு ரூ.1 லட்சம் கோடி: பிடிஆர்

ஒருலட்சம் கோடி
அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு ரூ.1 லட்சம் கோடி: பிடிஆர்
கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக செய்த செலவு மட்டும் ஒரு லட்சம் கோடி என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்திருப்பதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடாமல் செய்த செலவுகள் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்றும் அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையால் தான் தற்போதைய தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் என்றும் அவர் கூறியிருந்தார் 
 
கடனுக்கு வட்டி கட்ட கடன் வாங்கவேண்டிய நிலையில் தமிழகம் தற்போது உள்ளது என்றும் வாங்கிய கடனை முழுமையாக வளர்ச்சி திட்டத்தில் செலுத்தாமல் பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்ததால் தான் வருமானம் வரவில்லை என்றும் அவர் கூறினார்
 
மேலும் வணிக வரி துறை மூலம் கிடைக்க வேண்டிய வருமானம் அனைத்தும் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வந்த பிறகு சென்று விட்டது என்றும் தமிழகத்திற்கு பல வருவாய்கள் வரவில்லை என்றும் அவர் கூறினார்
 
 
அடுத்த கட்டுரையில்
குடிநீருக்கு மீட்டர் பொருத்தினால் மக்களுக்கு நன்மை: நிதியமைச்சர் பிடிஆர்