தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. பழனிச்சாமி முதல்வர்!.. தம்பிதுரை பேட்டி...
சட்டமன்றத் தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெருமாண்மை கிடைக்காத நிலையில் தமிழக அரசியலில் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆளுநரை இரண்டு முறை விஜய் சந்தித்தும் தவெகவின் கோரிக்கையை ஆளுநர் ஏற்கவில்லை. தனிப்பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு அதாவது ஆட்சியமைக்க தேவையான 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களோடு வந்தால் உங்களை ஆட்சி அமைக்க அழைக்கிறேன் என அவர் தெளிவாக கூறிவிட்டார்..
காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்தும் இன்னும் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தவெகவுக்கு தேவைப்பட்கிறது. எனவே விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். தற்போது அந்த இரு கட்சிகளும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். முடிவில் அவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்..
ஒருபக்கம் விஜய் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக அதிமுக ஆட்சி அமைக்கட்டும்.. திமுக பின்னாலிருந்து ஆதரவு கொடுக்கும் என்கிற பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாக கடந்த இரண்டு நாட்களாகவே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது.. அதாவது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பார்.. திமுக வெளியிலிருந்து ஆதரவு மட்டும் கொடுக்கும் என உயர் மட்டத்தில் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு பரபரப்பான சூழலில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை தமிழ்நாடு முழுவதும் மக்களின் உணர்வும் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுகவுக்குமே உள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழல் பற்றி அதிமுகவில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் பதவியேற்பார் என சொல்லியிருக்கிறார். தம்பிதுரை சொல்லியதை பார்க்கும்போது அதிமுக - திமுக இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்படும் எனத்தெரிகிறது.