1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Teacher who intimidates student Parental report

மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய தலைமையாசிரியர் ! பெற்றோர் அதிர்ச்சி

teacher abuse to sister
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் படித்துவந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம்செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டடம்  , கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு  அரசுப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு பாலாஜி என்பவர் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறார்.
 
இவர் வேதியியல் ஆசிரியர் என்பதால் மாணவிகளை ஆய்வு கூடத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இப்படியிருக்க கடந்த ஆண்டு 12ஆம் வகுப்புக் படிக்கும் போது ஆசிரியர் பாலாஜி  தன்னை பாலியல பாலத்காரம் செய்ததாகவும், பின்னர் தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்தததாகவும் அந்த பெண் பெற்றோரிடம்  கூறியுள்ளார்.
 
இதுசம்பந்தமாக மாணவியின் பெற்றோர் கொண்டாம்பட்டி  போலீஸ் ஸ்டேசனில்  புகார் அளித்த நிலைய்ல், பள்ளி ஆசிரியர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதற்கு ரூ. 5 பெற்றுத்தருவதாகவும், கருவை கலைக்க வேண்டுமெனவும் பெண் காவல் ஆய்வாளர் புஷ்பராணி மிரட்டியதாகத் தெரிகிறது. 
 
பின்னர் இந்த விவகாரம் காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அப்பள்ளிக்குச் சென்று விசாரித்துள்ளனர்.ஆனால் தலைமையாசிரியர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என்பதால் தற்போது அவர் மீது வழக்குப்பதிந்து போலீஸார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த ச சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
’ஜெய் ஸ்ரீராமை நான் கேட்டது கூட கிடையாது’: பொருளாதார நிபுணரின் சர்ச்சைப் பேச்சு