முட்டாள் முதல்வரே!.. எல்லாமே பொய்!.. விஜயை திட்டிய ஆர்.ராசா
கடந்த திமுக ஆட்சியின் போது பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ.வேலு. அவர் சாலை அமைக்காமலேயே 3.2 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மாதம் 25ம் தேதி எ.வ.வேலு அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. சமீபத்தில் எ.வ.வேலுவை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் நான் சிங்கப்பூரில் சிகிச்சையில் இருக்கிறேன் 10 நாட்கள் கழித்து வந்து ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என எ.வ.வேலு கூறியிருந்தார். சமீபத்தில் கரூரில் பேசிய முதல்வர் விஜய் கரூர் ஓனர் (செந்தில் பாலாஜி) எங்கே இருக்கிறார் என தெரியவில்லை.. ஓடிகொண்டே இருக்கிறார்.. இன்னொருத்தர் (எ.வ.வேலு) சிங்கப்பூருக்கு ஓடி விட்டார் என்று சொல்லியிருந்தார்..
இந்நிலையில், ஒரு திமுக கூட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எ.வ.வேலுவுக்கு உடல்நிலை சரியில்லை. கடந்த மாதம் 17ம் தேதியே அவர் சிங்கப்பூருக்கு டிக்கெட் போட்டு விட்டார்.. சோதனை நடந்தது 25ஆம் தேதி.. சோதானைக்கு ஒத்துழைப்பு கொடுத்துவிட்டுதான் சிங்கப்பூருக்கு சென்றார். இது தெரியாமல் முட்டாள் முதல்வர் விஜய் எ.வ.வேலு பயந்து கொண்டு சிங்கப்பூருக்கு சென்று விட்டதாக பேசுகிறார்.. பொய் சொல்வதில் ஒரு அளவு வேண்டாமா?.. ராஜாஜியும், காமராஜரும் இருந்த இடத்தில் ஒரு பொய்யர் வந்து அமர்ந்திருக்கிறார் என்று கடுமையாக பேசியிருக்கிறார்.