பள்ளியில் மண்டியிட்டு வணங்கிய அமைச்சர் : வைரலாகும் போட்டோ

jeyakumar
Last Modified புதன், 3 ஜூலை 2019 (14:29 IST)
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கோரிக்கைகள் பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றனர். எதிர்கட்சிகள் தொடுக்கும் அனல் பறக்கும் கேள்விகளுக்கு சூடான பதில்களை அண்ணா திமுக  அமைச்சர்களும் தவறாமல் தருகின்றனர். 
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் உள்ள கேசி  சங்கரலிங்கர நாடார் மேலநிலைப்பள்ளி, முருக தனுஸ்கோடி மகளிர் மேல்நிலப்பள்ளி, பி.கே. பழனிசாமி பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் மடிக்கணிணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். 
 
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் தான் தான் படித்த பள்ளி கே.சி. சங்கரலிங்க நாடார் என்பதால் அவர் மேடையில் மண்டியிட்டு வணங்கினார்.
 
மேலும் மேடையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் , மாணவர்களிடையே சில கேள்விகளை கேட்டார். அதற்குப் பதில் சொன்னவர்களுக்கு ரு. 500 பரிசு வழங்கி அசத்தினார். பின்னர் தான் படித்த வகுப்பறைக்குச் சென்று, அங்குள்ள மாணவர்களுக்கு கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் : வரும் : ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவிக்கும் என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :