ரூ. 60 லட்சம் சம்பளம்..தமிழக மாணவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை
சென்னையில் வசிக்கும் கே.பி.ஷியாம் என்ற மாணவருக்கு கூகுள் இணையதளத்தில் வேலை கிடைத்துள்ளது. அவருக்கு மாதம் 5 லட்சம் சம்பளம்... வருடத்துக்கு ரு. 60 லட்சம் சம்பளம் என்று தகவல் வெளியாகிறது.
கே.பி. ஷியாம் பெங்களூரில் உள்ள International Institute of Information Technology கல்லூரியில் i. mtech என்ற இரட்டை பட்டப் படிப்பை முடித்துள்ளார்.
போலந்து நாட்டில் உள்ளா வார்சா (Warsaw) கூகுள் நிறுவனத்தில் வரும் அக்டோபர் மாதத்தில் ஷியாம் வேலைக்குச் சேரப் போகிறார் என்று தகவல் வெளியாகிறது.
அதவாது, ஜனவரியில் ஷியாம் கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார்... அதன்பின்னர் அவருக்கு நேர்காணல் நடத்தி உள்ளனர். கூகுள் நிறுவனத்தினர் வைத்த அனைத்து தேர்வுகளிலும் ஷியாம் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதன் பின்னர் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் ஒரு நேர்காணல் நடைபெற்றது. அதிலும் அசத்தலாக ஷியாம் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து கூகுள் நிறுவனம் அவரை வேலையில் சேருமாறு அழைத்துள்ளது.
ஷியாம் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துள்ளது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை ஆகும்.இதனை சென்னை வாசிகள் கொண்டாடி வருகின்றனர்.