1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac shops workers protest in chennai

தமிழ்நாடு ஃபுல்லா டாஸ்மாக் கடையை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம்!..

tasmac
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண், போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் டாஸ்மாக் கடைகள் தொடர்பான முறைகேடுகளை விசாரிப்பது என அதிரடி காட்டத் தொடங்கினார்.

டாஸ்மாக்கை பொறுத்தவரை 717 கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டார். அதோடு அந்தக் கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு மாற்று பணிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒருபக்கம் இரவு 10 மணிக்கு மேல் கடையை திறந்து திறந்து வைத்திருக்கக் கூடாது, கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யக்கூடாது, பாட்டில் விலையை தவிர அதிக விலைக்கு விற்கக் கூடாது என்றெல்லாம் தமிழக அரசு கடுமையான உத்தரவுகளை போட்டது..

ஆனால், இப்போதும் பல இடங்களில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் சேர்த்து தான் வாங்குகிறார்கள் என மதுப்பிரியர்கள் புலம்புகிறார்கள். இது தொடர்பாக குடிமகன்கள் டாஸ்மார்க் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில்தான் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் எனக்கூறி சென்னை மண்டலத்தில் 1500 டாஸ்மாக் கடைகளை திறக்காமல் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனில் தமிழக முழுவதும் கடையில் அடைக்கப்படும் எனவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.. அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.