முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை.. மனைவியை பிரிந்த ஆதவ் அர்ஜுனா..
தவெகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. விடுதலை சிறுத்தை கட்சியில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா விஜய்க்கு ஆதரவாக பேசியதால் அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எனவே ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபின் ஆதவ் அர்ஜுனா அமைச்சராகிவிட்டார். சட்டசபையில், எதிர்கட்சியான திமுக எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய்க்கு பதிலாக ஆதவ் அர்ஜுனாதான் பதிலளித்து வருகிறார்.
ஒருபக்கம், சொந்த வாழ்வில் லாட்டரி அதிபர் மார்டினின் மகள் டெய்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..
இந்நிலையில் 14 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாகவும் டெய்சி மார்ட்டின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 14 வருடங்களாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்த நாங்கள் அன்பு, புரிதல் உள்ளிட்ட பல கட்டங்களை கடந்து வந்துள்ளோம்..
நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணையாகவும், பெற்றோர்களாகவும் இணைந்து வாழ்ந்தோம். தற்போது இருவரும் வெவ்வேறு பாதையில் தனித்தனியாக பயணிக்க முடிவெடுத்துள்ளோம். இது புதிய தொடக்கமாக இருந்தாலும் எங்கள் குழந்தையை வளர்ப்பதிலும், குழந்தைகள் மகிழ்ச்சியை நலனை உறுதி செய்வதிலும் நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம் என அவர் அந்த அறிக்கையில் பதிவிட்டிருக்கிறார்.