1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances in few days

10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
உள்நோக்கத்துடன் பேசவில்லை; ஆர் எஸ் பாரதி வழக்கு ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!