வெளியானது +2 ரிசல்ட்; கல்லூரி சேர்க்கை எப்போது? – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியான நிலையில் கல்லூரி அட்மிசன் குறித்து அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் அனைவருக்கும் ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 8,16 , 473 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்டு 26 வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.