வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (12:08 IST)

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை!!

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை!!
அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

 
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து மும்பையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மூன்றே மணி நேரத்தில் 25 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. 
 
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.