1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu rain chances for 4 days

4 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காற்று மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையில் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று திருவள்ளூர், வேலூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், நாளை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி வழந்த தயார்! – இந்தியா அறிவிப்பிற்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு!