1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in chennai yesterday

சென்னையில் விடிய விடிய மழை: சாலைகளில் வெள்ளம்!

சென்னை
சென்னையில் நேற்று விடியவிடிய மழை பெய்ததை அடுத்து மழை நீர் சாலைகளில் ஓடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நேற்று இரவு முதல் விடிய விடிய சென்னையில் கன மழை பெய்தது 
 
இந்த மழை காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் தற்போது வெள்ள நீர் ஓடி வருகிறது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
அடுத்த கட்டுரையில்
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை தாலிபன் ஆதரிக்காது: ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர்