1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu have more rain chances

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
தமிழகத்தில் பெருவாரியான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் 9ம் தேதி தென் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு பாஸ்போர்ட் டெலிவரி! – அமேசானால் வாடிக்கையாளர் அதிர்ச்சி!