புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:09 IST)

சென்னையில் இன்று ஒரே நாளில் 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்!

சென்னையில் இன்று ஒரே நாளில் 40 டன்கள் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
சென்னையில் காலையில் ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அந்த அறிவிப்பை மீறி நேற்று நாள் முழுவதும் பட்டாசுகள் வ்எடிக்கப்பட்டன என்பதும் இதன் காரணமாக ஒரு சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை முழுவதும் நாற்பத்தி எட்டு டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தீபாவளியை ஒட்டி சென்னையில் அதிகாலை முதல் தற்போது வரை 48 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் இன்னும் அதிக கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு குப்பைகளை அகற்றும் பணி இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்