புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (09:54 IST)

திடீரென வெடித்த பைக்கில் கொண்டு சென்ற பட்டாசு! – ஷாக்கிங் வீடியோ!

புதுச்சேரியில் தந்தை, மகன் பட்டாசு வாங்கி கொண்டு பைக்கில் சென்றபோது பைக்கிலேயே பட்டாசு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாட்டத்தின்போது சில வெடி விபத்துகள் நிகழ்ந்து விடுவதும் உண்டு.

இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் கலைநேசன் என்பவர் அவரது 7 வயது மகனுடன் கடைக்கு சென்று பட்டாசு வாங்கி கொண்டு தன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பட்டாசுகள் வெடித்ததில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது