1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu have rain chances in 9 districts

9 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர், சேலம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அண்ணாத்த - ரஜினிகாந்த் படத்தின் சினிமா விமர்சனம்!