1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamilnadu cpm shanmugam comment agasint vijay

கரூர் சம்பவம்!. அரசு வேலை கொடுப்பதற்கு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு!..

shanmugam vijay
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில்தான், முதல்வர் விஜய் நாளை கரூருக்கு செல்லவிருக்கிறார். மேலும், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து 32 பேருக்கு அவர் அரசு பணியை வழங்கவிருக்கிறார்.

இதற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தவெக ஆட்சி அமைவதற்கு ஆதரவு கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சண்முகமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி  முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்’ என கூறியிருக்கிறார்.