1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. senthil balaji seeking bail from court

நாங்க ஒரு தப்பும் பண்ணல!.. நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்!...

tvk vijay
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ இளங்கோவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில், திருநாவுக்கரசு உள்ளிட்ட 2 பேர் கரூரை சேர்ந்தவர்கள். அதோடு, அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கூறியே இதில் ஈடுபட்டடாக வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்த காவல்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், இதுவரை அவர்கள் ஆஜராகவில்லை. அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில், குற்ற சதிக்கு வலுவான ஆதரங்கள் இருக்கிறது. இதில் கைது செய்யப்பட்ட 2 பேர் கரூரை சேர்ந்தவர்கள். அதில், திருநாவுக்கரசு எங்கே இருந்தாரோ அங்கேதான் அசோக்கும் இருந்த ஆதாரங்கள் இருக்கிறது. அரசை கவிழ்க்க இவர்கள் சதி செய்திருக்கிறார்கள். சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதில், அசோக்குமாருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதரங்கள் இருக்கிறடு. இதில், ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக என்கிற சந்தேகம் இருக்கிறது’ என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.

ஆனால், செந்தில் பாலாஜி தரப்போ ‘சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் ஆட்சி கவிழாது. திமுகவிடம் தற்போது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆட்சியை கவிழ்க்க முடியாது. 35 கோடி என்பது போலீசாரின் யூகம் மட்டுமே. நாங்கள் எந்த பேரத்திலும் ஈடுபடவில்லை. செந்தில் பாலாஜியை வழக்கில் சேர்க்கும் போதெல்லாம் அசோக் குமார் பெயரையும் சேர்த்துவிடுகிறார்கள். கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசும், அசோக் குமாரும் ஈரோட்டில் இருந்தனர் என்பதற்காக குற்றம் செய்ததாக ஆகிவிடாது’ என வாதத்தை முன் வைத்து வாதாடி வருகிறது.