1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tamilnadu colleges open from Sep11

செப்.1 முதல் அனைத்து கல்லூரிகளும் திறப்பு!

colleges open
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்ரறை ஆண்டுகளாக கல்லூரிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் வருகிற செப்டம்பர் 1 முதல் அனைத்து  கல்லூரிகளும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி, இளநிலை இரண்டாம் ஆண்டு, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும். பொறியியல் படிப்புகளிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் நேரடி வகுப்புகள் நடத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 
 
கட்டாயம் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டே கல்லூரிக்கு வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படியும் போடாத மாணவர்களுக்கு கல்லூரியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளையே பாடங்களை தொடர முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
தடுப்பூசி போடவில்லை என்றால் ரூ.15000