1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 14 ஆகஸ்ட் 2021 (09:01 IST)

உடற்பயிற்சி நிலையத்திற்கு சமூக இடைவெளி முக்கியம் - கண்காணிப்பு தீவிரம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தொடர்ந்து நோய் தொற்றினை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. 
 
அந்தவகையில், உடற்பயிற்சி உரிமையாளர் ஜிம்மிற்கு வரும் வாடிக்கையாளர்கள் முறையான முகக்கவசம் அணிந்து , சமூக இடைவெளியை அறிவுறுத்தி மூன்றாம் அலை பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
 
பல உடற்பயிற்சி நிலையங்களில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும், உடற்பயிற்சி கருவிகள் சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவில்லை என்று வந்த புகாரை தொடர்ந்து சென்னையில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கண்காணிப்பை தீவிர படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே அனைத்து உடற்பயிற்சி நிலையங்களிலும் மாநகராட்சி அதிகாரிகள் தீடீர் சோதனை நடத்த வாய்ப்பு உள்ளது.