ஒரே நாளில் 4.88 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 4.88 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தகவல்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்ககியதில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்பூசி போடும் பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது.
இதனிடையே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது அவர் பேசியது பின்வருமாறு...
ஆம், இந்தியாவிலேயே முதன் முறையாக 36 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து தமிழகத்தில் 55 மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்படும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்கும் எந்த நேரத்திலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வசதியாக இருக்கும்.
மேலும், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 4.88 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.