1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (11:23 IST)

குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில்...?

குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என மத்திய அரசு தகவல். 

 
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு, மாட்ர்னா உள்ளிட்ட 5 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில்,  குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆராய்ச்சியை மேற்கொள்ள ZYDUS CADILA மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு ஒப்பதல் அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனால் குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசும் ZYDUS CADILA உருவாக்கி வரும் தடுப்பூசி 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.