1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu will have Hot Weather

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கொளுத்தும் வெயில் ....

அனல் காற்று
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பநிலை முன் எப்போது இல்லாத அளவில் உயர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு அனல் காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. 
 
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரும். சென்னையை பொறுத்தவரை இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை கடுமையாக உயரக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
வித்தியாசமான வாக்கு சேகரிப்பு… கவனத்தை ஈர்த்த பாமக வேட்பாளர்!