புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:34 IST)

பிற்பகல் நேரத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் - அனல் காற்று எச்சரிக்கை!

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என  வானிலை மையம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. 
 
பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை அனல் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் பிற்பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இது தேர்தல் நேரம் என்பதால் வேட்பாளர்கள் பரப்புரை மற்றும் ஊர்வலம் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.