1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain

தமிழகத்திற்கு மழை!!

சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
காற்றின் சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வி மையம் தெரிவித்துள்ளது.
 
புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
பிரிட்டிஷ் ராஜ குடும்ப மோசமான நடவடிக்கையை உடைத்த ஹாரி - மேகன் மார்க்கல் !