புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (08:38 IST)

வித்தியாசமான வாக்கு சேகரிப்பு… கவனத்தை ஈர்த்த பாமக வேட்பாளர்!

வித்தியாசமான வாக்கு சேகரிப்பு… கவனத்தை ஈர்த்த பாமக வேட்பாளர்!
பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளர் ராஜமன்னார் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை லாரியில் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

பூந்தமல்லி தனித்தொகுதியில் பாமக சார்பாக ராஜமன்னார் போட்டியிடுகிறார். அவர் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் மற்றும் விலையில்லா வாஷிங் மெஷின்கள் ஆகியவற்றை ஒரு லாரியில் வைத்து மக்களின் பார்வைக்கைக் கொண்டு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.