1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have rain for next two days

இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் மழை - வானிலை மையம் தகவல்!

தமிழகம்
இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல். 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் பல இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் முன்னறிவிப்பின்றி கடும் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்நிலையில் இன்றும், நாளையும் தமிழ்நாட்டின் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
வானிலை மையம் இது குறித்து விரிவாக தெரிவித்துள்ளதாவது, ஜனவரி 8 ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். வங்கக்கடலில் ஜனவரி 9 ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதால் தென்மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு: நாளை விசாரணை!