1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (10:27 IST)

எம்.ஐ.டி கொரோனா பாதிப்பு 80 ஆக உயர்வு! – 50 பேருக்கு ஒமிக்ரான்??

சென்னை எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான தெருக்களில் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் பொதுமக்கள் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உள்ள மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1417 மாணவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 80 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.