1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (09:22 IST)

ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது! தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் குழு!

சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியே சுற்றாமல் இருப்பதை கண்காணிக்க குழு அமைக்கப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தலைநகரான சென்னையில் பல தெருக்களில் கொரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன. இதனால் சென்னையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வீடுகளுக்கே சென்று மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. வார்டுக்கு ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி திரிகின்றனரா என்பதை கண்காணிக்கவும் 5 தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.