தொடர்புடைய செய்திகள்
- ஜல்லிக்கட்டு போராளிகளை சமூக விரோதிகள் என்றேனா?? – ஓபிஎஸ் விளக்கம்!
- தேர்தல் முடிஞ்சதும் ஒரு நல்ல சேதி இருக்கு! – சர்ப்ரைஸ் வைத்த மு.க.ஸ்டாலின்!
- எங்க வேட்பாளர்கள் 60 பேரை கடத்திட்டாங்க! – சீமான் குற்றச்சாட்டு!
- திமுகவுக்கு ஓட்டு கேட்கும் வெளிநாட்டுக்காரர்! – கோவையில் சுவாரஸ்யம்!
- ஜெபமாலை, மெழுகுவர்த்தி கொடுத்து வாக்குசேகரிக்கும் பாஜக! – கோவையில் சுவாரஸ்யம்!
இன்று எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?
தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.
பிப்.18 முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா மற்றும் அதையொட்டிய பகுதியின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சியால் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதோடு நாளை (18 ஆம் தேதி) தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
