செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:22 IST)

எங்க வேட்பாளர்கள் 60 பேரை கடத்திட்டாங்க! – சீமான் குற்றச்சாட்டு!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தங்கள் வேட்பாளர்கள் கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நகர்புற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் பல இடங்களில் போட்டியிட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என அஞ்சி பிற கட்சி வேட்பாளர்கள் பலர் இதுவரை 60 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கடத்தி, மிரட்டி தேர்தலில் இருந்து வாபஸ் பெற வைத்துள்ளதாக நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் பல பகுதிகளில் பரிசுப் பொருட்கள், பணப்பட்டுவாடா நடப்பதாகவும், நா.த.க வேட்பாளர்கள் மட்டுமே நேர்மையான வழியில் வாக்கு சேகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.