வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (12:08 IST)

ஜல்லிக்கட்டு போராளிகளை சமூக விரோதிகள் என்றேனா?? – ஓபிஎஸ் விளக்கம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமூக விரோதிகள் என தான் சொன்னதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு தடை செய்யப்பட்டதை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு மிகப்பெரும் போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அப்போதைய முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சமூக விரோதிகள் என குறிப்பிட்டதாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் “ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ குறிப்பிடவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தேச – சமூக விரோத போராட்டம் என நான் பேசியதாக கூறுவதில் உண்மையில்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து காவல்துறை அளித்த ஆதாரங்கள் அடிப்படையில்தான் பேரவையில் பேசினேன். போராட்டத்தை கைவிட மறுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக சிலர் செயல்பட்டனர்” என தெரிவித்துள்ளார்.