வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:24 IST)

ஜெபமாலை, மெழுகுவர்த்தி கொடுத்து வாக்குசேகரிக்கும் பாஜக! – கோவையில் சுவாரஸ்யம்!

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் கிறிஸ்தவ பொருட்களை கொடுத்து பாஜகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 10 வார்டுகளில் பாஜக போட்டியிடுகிறது. இந்த நகராட்சியில் 8 வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் பெரியசாமி என்பவர் சிறுபான்மையினர் வாக்குகளை கவர்வதற்காக ஜெபமாலையுடன் கூடிய சிலுவையும், இரு மெழுகுவர்த்திகளையும்  பிளாஸ்டிக் தட்டில் வைத்து கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகிறார்.

பாரதி ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிராக  செயல்படுவதாக கடும் விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில் அவர்களை கவரும் விதமாக கிறிஸ்தவ பொருட்களை கொடுத்து பாஜக வேட்பாளர் வாக்கு சேகரித்து வருவது வைரலாகியுள்ளது.