1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (21:26 IST)

மாநில விருது புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

karur
மாநில விருது புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இத்திட்டத்தில் எழுத படிக்க தெரியாத 14 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தன்னார்வர்களை கொண்டு பயிற்சிகள் தரப்பட்டன. அதற்காக தனி தேர்வும் நடத்தப்பட்டது. 
 
கரூர்  மாவட்டத்தில் 498 மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் சிறப்பாக பயிற்சி தரப்பட்ட மையங்களில் மூன்று மையங்கள் தேர்வு செய்யப்பட்டு 3/8/ 2023 அன்று மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு மூர்த்தி ஆகியோர் மாநில எழுத்தறிவு விருதினை வழங்கி பாராட்டினார்கள்.
 
இவ்விருதினை தலைமை ஆசிரியர் தேன்மொழி ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரைச்செல்வி தன்னார்வலர் வசந்தி ஆகியோர்  விழாவில் கலந்து கொண்டு விருதினை பெற்று கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களிடமும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களிடமும் வாழ்த்துக்கள் பெற்று வந்தனர். 
 
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக விருதினை இப்பள்ளி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும் மாநில விருது.
 
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் எழுத படிக்க தெரியாத 14 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தன்னார்வர்களை கொண்டு பயிற்சிகள் தரப்பட்டன. அதற்காக தனி தேர்வும் நடத்தப்பட்டது. கரூர்  மாவட்டத்தில் 498 மையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் சிறப்பாக பயிற்சி தரப்பட்ட மையங்களில் மூன்று மையங்கள் தேர்வு செய்யப்பட்டு 3/8/ 2023 அன்று மதுரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு மூர்த்தி ஆகியோர் மாநில எழுத்தறிவு விருதினை வழங்கி பாராட்டினார்கள்.
 
இவ்விருதினை தலைமை ஆசிரியர் தேன்மொழி ஆசிரியர் பயிற்றுனர் செந்தாமரைச்செல்வி தன்னார்வலர் வசந்தி ஆகியோர்  விழாவில் கலந்து கொண்டு விருதினை பெற்று கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களிடமும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களிடமும் வாழ்த்துக்கள் பெற்று வந்தனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக விருதினை இப்பள்ளி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது