வெள்ளி, 27 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 பிப்ரவரி 2026 (17:25 IST)

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தகவல்!

nainar nagendran
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1-ஆம் தேதி மதுரைக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகைக்கு பின்னரே கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முறைப்படி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
 
சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். 
 
காங்கிரஸை போல கூட்டணி ஆட்சி என்பதில் எங்களுக்கு பிடிவாதம் இல்லை" என்று குறிப்பிட்ட அவர், அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான எதிர்காலத்தை உருவாக்க போவதாக தெரிவித்தார். 
 
மோடியின் இந்த மதுரை பயணம் மற்றும் அதனை தொடரும் தொகுதி பங்கீடு முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
Edited by Siva