வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2026 (17:53 IST)

அடுத்த தவெக மீட்டிங் இங்கதான்!. தேதி குறிச்ச விஜய்.. பக்கா பிளான்!...

vijay
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி 2 வருடங்களாகிவிட்ட நிலையில் தவெக முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இதுவரை தவெக பொதுக்கூட்டம் தமிழகத்தின் பல இடங்களிலும் நடந்திருக்கிறது.

குறிப்பாக விக்கிரவாண்டி, மதுரை அது இரண்டு இடங்களிலும் பெரிய மாநாடு நடந்தது. அதில் 10 லட்சம் பேர் வரை கலந்து கொண்டார்கள். அதன்பின் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார் விஜய். அப்படி அவர் கரூருக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

அதன்பின் வேலூர், சேலம் ஆகிய இரண்டு ஊர்களிலும் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் விஜய். இந்நிலையில்தான், அடுத்து தவெக நிர்வாகிகள் கூட்டத்தை தஞ்சாவூரில் நடத்த விஜய் முடிவெடுத்திருக்கிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது.. சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு தஞ்சையில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது..