1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Srivilliputhur court refuses to provide bail for Nirmala Devi

நிர்மலா தேவியின் ஜாமின் மனு தள்ளுபடி!

நிர்மலா தேவி
மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

 
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் ஆளுநருக்கு தொடர்பு உள்ளது என்று பலரும் தெரிவித்து வந்தனர். ஆளுநர் இதுகுறித்து விசாரணை நடத்த தனி குழு ஒன்றை அமைத்தார்.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நிர்மலா தேவியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நிர்மலாதேவி தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
 
அவரது மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்க மறுத்ததோடு அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
அடுத்த கட்டுரையில்
கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?